மட்டு மாவட்ட செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம்.....
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் (26) அன்று மாவட்ட மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் மாதாந்த முன்னேற்ற மீளாய்வு பற்றி கலந்துரையாடப்பட்டன. இதில் தாபன விடயம், கருத்திட்டம், நிதி, சமுர்த்தி நிவாரனம், வங்கிப்பிரிவு, சமூக பாதுகாப்பு, சமூக அபிவிருத்தி, ஓய்வூதியம் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
14 பிரதேச செயலகங்களில் இருந்து சுலபமாக எவ்வாறு தகவல்களை பெற்றுக் கொள்வது, விரைவாக நம் சேவைகளை வழங்க தயாராதல், மற்றவர்களின் தேவைக்காக நாம் சேவையாற்றுதல் போன்ற விடயங்களை பணிப்பாளர் எடுத்துரைத்தார்.
இக் கூட்டத்தில் மாவட்ட சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment