உதைபந்தாட்ட போட்டிகளில் ஆண்கள் பிரிவில் திருமலை மாவட்டமும் பெண்கள் பிரிவில் மட்டு மாவட்டமும் தேசிய மட்டத்திற்கு தெரிவு....
உதைபந்தாட்ட போட்டிகளில் ஆண்கள் பிரிவில் திருமலை மாவட்டமும் பெண்கள் பிரிவில் மட்டு மாவட்டமும் தேசிய மட்டத்திற்கு தெரிவு....
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்டு வரும் விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணங்களுக்கான ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் திருகோணமலை மாவட்ட அணி வெற்றிபெற்று தேசிய மட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளது. பெண்களுக்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றிபெற்று தேசிய மட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கத்தின் பணிப்பாளர் N.M நவ்பீஸ் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற இன்றறைய (08) நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் K.கருனாகரன் அவர்கள் பிரமத அதிதியாக கலந்து கொண்டார்.
ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் திருகோணமலை மாவட்டமும் அம்பாறை மாவட்டமும் மோதிக் கொண்டன இதில் திருகோணமலை மாவட்டம் 4:1 என்கின்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி கொண்டது.
மட்டக்களப்பு மாவட்ட பெண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணி இரண்டு போட்டிகளை சந்தித்து. அம்பாறை மாவட்ட அணிக்கான போட்டியில் 6:0 என்கின்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அணி திருகோணமலை மாவட்ட பெண்கள் அணியுடன் அடுத்த போட்டியில் சந்தித்தது அப்போட்டியில் 2:0 என்கின்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி கொண்டது.
Comments
Post a Comment