இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய தழிழர்கள்...........

 

இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய தழிழர்கள்...........

 இலங்கை  கிரிக்கெட் அணியில் விளையாடிய தழிழர்கள்...........

1.இலங்கையை அதிர வைத்த கிரிக்கெட் தமிழன் மகாதேவன் சதாசிவம்......

இன்று கிரிக்கெட் விளையாட்டு பற்றிய தேடல் பலவாறு தென்படுகின்றன. சுவாமி விவேகானந்தர் கூட 1880ல் கிரிக்கெட் விளையாடியதாக தகவல்கள் தெரிவிப்பதாக அன்மையில் ஒரு செய்தியை பார்த்தேன் இது தான் தேடல் இந்த தேடலில் நான் ஓர் தேடலை தேடுகின்றேன், தேடியும் வருகின்றேன், தேடியை தங்களுடன் பகிரவும் விரும்புகின்றேன் பலரும் அறிய....  

நம்மவர் பலருக்கு இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் தழிழர் என்றால் முத்தையா முரளிதரன் மாத்திரம் தான் பலர் கண்களுக்கு தென்படும், மற்றவர்களின் பெயர்கள் மங்கி போனதாகவே காணப்படுகின்றன. ஆனால் ஆரம்ப காலங்களில் இலங்கைக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுப்பதற்கு முன்னமே சிலோன் கிரிக்கெட் அணியில் பல தழிழ் வீரர்கள் தங்கள் சாதனைகளை படைத்து தங்களுக்கென்று ஓர் இடத்தினை தக்க வைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் வரலாறு கூறுகின்றது. அதில் ஆதிக்கம் செலுத்திய ஒரு சிலரை நாம் பார்ப்போம்.....

இலங்கையின் பிராட்மேன் என எல்லோராலும் செல்லமாக அமைக்கப்பட்டவர் தான் மாகாதேவன் சதாசிவம் அவர்கள், இவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் சரி சொந்த வாழ்க்கையும் சரி பல சுவாரஸ்சியமான விடயங்களை தொட்டு செல்வதை நாம் அவதானிக்க முடிகின்றது. இந்நிதியாவில் இருந்து வெளிவருடன் விகடன் இதழில் இவரைப்பற்றி இப்படி தலைப்புடன் ஒரு கட்டுரை வந்தது.

சதாசிவம்... இலங்கையின் முதல் தமிழ் கேப்டன்... அந்த கிரிக்கெட் மாவீரனின் காலத்தையே  முடித்து வைத்த கொலைப்பழி!  அக்கட்டுரையில்  இந்தியாவில் நடைபெற்ற ஒரு போட்டி பற்றி இப்படி கூறுகின்றது. சாய்வான தொப்பியை அணிந்து கொண்டு, கழுத்தில் ஒரு துணியை கட்டிக் கொண்டு மிகவும் சாதாரணமாக களம் இறங்கிய சதாசிவம், மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் பந்தை விரட்டி அடித்திருக்கிறார். சென்னை ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்த சதாசிவம் அன்று தனிநபராக அடித்த ஓட்டங்கள் 215 என்றால் நீங்கள் வியந்து விடுவீர்கள்.

 அவரது துடுப்பாட்டத்தை அன்று நேரில் பார்த்த பலர் இன்று உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. ஆனால், உயிரோடு இருக்கும் சிலரும் தங்கள் வாழ்க்கையில் அப்படியொரு துடுப்பாட்டத்தை மீண்டும் காண சந்தர்ப்பமே இல்லை எனலாம். மிட் ஆனிலும், கவர்ஸிலும், லெக் சைடிலும் பந்தை அவர் தூக்கி அடிப்பதை பற்றி இன்றும் கண்கள் பிரகாசிக்க கதை சொல்பவர்கள் உண்டு! சுழற்பந்து வீச்சில் கீப்பரின் கைகளுக்கு அருகே சென்று இவர் ஆடும் கட் ஷாட்டைப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்குமாம். இவர் விளையாட வந்தாலே மைதானத்தில் பெண்கள் கூட்டம் குவியுமாம். இப்படி பட்டவர் தான் இலங்கை தமிழரான 'சதா' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மகாதேவன் சதாசிவம்.

1915-ம் ஆண்டு கொழும்பில் பிறந்த இவர் தனது 15வது வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். கல்லூரிகள் மற்றும் உள்ளூரில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனது திறமையை தொடர்ந்து சீராக வெளிப்படுத்தி வந்தவருக்கு ஆரம்பத்தில் ஏனோ இலங்கை அணியில் இடம் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் தன் விளையாட்டை தொடர்ந்து வந்தார். காலம் உருண்டோட திருமண ஆசை இவருக்கு வந்தது இவர் 1941ல் சேர் பொண்ணம்பலம் இராமநாதனின் பேத்தியான பரிபூரணம் ஆனந்தம் இராஜேந்திராவை மணக்கின்றார் இவருக்கு 04 பிள்ளைகளும் கிடைக்கின்றன இத்திருமணம் பற்றி நீங்கள் கூர்ந்த கவணித்தால் பிற்பகுதி சுவாரஸ்சியமாக இருக்கும்.; 


1940-41
களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற இலங்கை கிரிக்கெட் அணியில் சதாசிவம் இடம்பெறாதது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. அவரின் நிராகரிப்புக்குப் பின்னால் வேறு காரணங்கள் இருக்கிறது என்கிற பேச்சு இலங்கை முழுவதும் பரவியது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் பெரிதாக கவலை கொள்ளவில்லை சதாசிவம். 1944-45 ஆண்டுவாக்கில் நடைபெற்ற பாம்பே பெண்டாங்குலர் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இஸ்லாமியர்கள் அணியும், ரெஸ்ட் அணியும் மோதிக் கொண்டன. இதில் ரெஸ்ட் அணிக்காக களம் கண்ட சதாசிவத்திற்கு அதுதான் அறிமுகப் போட்டி. 'முதல் போட்டியாச்சே.... அதுவும் இந்தியாவில் வந்து விளையாடுறோமே' என எந்த பயமும் சதாவிடம் இல்லை. எதிரணியில் ஒன்பது வீரர்கள் பந்து வீசியும் அவரை ஆட்டமிழக்க வைக்க முடியவில்லை. முடிவில் 169 நிமிடங்கள் களத்தில் நின்று 101 ரன்கள் அடித்தார் சதா. இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இந்த தழிழர் படைத்தார். பொதுவாக 'ரெஸ்ட்' அணியில் கிறிஸ்தவர்களும் ஆங்கிலோ இந்தியர்களுமே இடம் பெற்றிருப்பார்கள். கொழும்புவைச் சேர்ந்த சதாசிவமும் கிறிஸ்தவர் என்று நம்பி அணியில் சேர்த்துக் கொண்டனர். ஆனால், அவர் கிறிஸ்தவர் இல்லை என்பது மிகவும் தாமதமாகவே அவர்களுக்கு தெரிந்திருந்தது.

சதாசிவத்தின் கேரியரில் மூன்று போட்டிகள் முக்கியமானது. காலத்தை வென்ற பேட்ஸ்மேன் என்ற பெயரை இந்த போட்டிகளே அவருக்கு பெற்றுக் கொடுத்தது. 1944/45ல் சிலோன் அணியோடு விளையாடுவதற்கு கொழும்பு வந்தது இந்திய அணி.

மாகாதேவன் சதாசிவம்  அவர்களின் சுவாரஸ்சியமான அடுத்த பகுதியை நாளை பார்ப்போம்......



Comments