ஈரளக்குளம், சவுக்கடியில் மரநடுகை....
தேசிய மரநடுகை வாரத்தினை முன்னிட்டு (23) அன்று ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட சவுக்கடி மற்றும் ஈரளக்குளம் கிராமத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் K.தனபாலசுந்தரம் தலைமையின் நடைபெற்றது. நாடு பூராவும் தற்போது இச்செயற்திட்டம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.இராசலிங்கம் அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் S.கலாதேவன் அவர்களும், சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment