காகித நகர் கிராமத்தில் சௌபாக்கியா வீடு முடிவு.......
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வறிய மக்களின் வீட்டுத்தேவையை ஓரளவேணும் பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஆண்டு தோறும் செயற்படுத்தி வருகின்றன. இதற்கமைய 2022ம் ஆண்டிற்காக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சௌபாக்கியா 6,50,000 மற்றும் 2,25,000 ரூபாவை நன்னொடையாக வழங்கி மிகுதி தொகையை சமுர்த்தி பயனாளி இடுவதன் மூலமும் அக்கிராமத்தில் உள்ள தனவந்தர்களின் உதவியை பெறுவதன் மூலமும் இவ்வீடுகளை முழுமையாக பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
அந்த வகையில் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலகத்திற்கு 2022ம் ஆண்டு 225000 ரூபாய்கான 03 வீடுகள் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதன் பிரகாரம் காகிதநகர் 210/D கிராம பிரிவைச் சேர்ந்த ஹ.மு. றிஸ்னா என்பவரின் வீட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவுற்ற நிலையில் காணப்படுகின்றது. இறுதிக்கட்ட பணிகள் பூரணப்படுத்தப்பட்டு மிக விரைவில் உரிய சமுர்த்தி பயனாளியிடம் வீடு ஒப்படைக்கப்படும் என சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment