மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு......
தற்போதைய காலத்தில் மட்டக்களப்பு வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதித் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அதற்கான உதவிகளை செய்யுமாறு பல அமைப்புக்கள், நிறுவயங்கள், விளையாட்டு கழகங்களுக்கு மட்டக்களப்பு வைத்தியசாலை இரத்த வங்கி கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஒரு இரத்ததான நிகழ்வை (06) ஏற்பாடு செய்து வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர் என பல தரப்பட்ட உத்தியோகத்தர்களும் இன்றைய இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டனர். மொத்தமாக 40 கொடையாளிகள் தங்கள் இரத்தங்களை தானமாக வழங்கி இன்னோர் உயிர் காக்க உதவியுள்ளனர் இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகம் இணைந்து அனுசரனை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment