ஓட்டமாவடியில் 'சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை' தேசிய மரநடுகை வேலைத்திட்டம்

 ஓட்டமாவடியில் 'சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை' தேசிய மரநடுகை வேலைத்திட்டம்



நாட்டின் வறுமையை இல்லாமல் செய்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சமுர்த்தி திணைக்களத்தினால் 'சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை' எனும் தொனிப்பொருளில் தேசிய மரநடுகை தின சுற்றாடல் வேலைத்திட்டம் 17.09.2022 தொடக்கம் 23.09.2022 வரை பிரகடனப்படுத்தி மரநடுகை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி சிறுவர் பூங்கா, சூடுபத்தினசேனை தின்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் போன்றவற்றில் (22) பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

ஓட்டமாவடியில் மரநடுகை வேலைத் திட்டம் (22) திகதி அன்று சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பசுமைப்புரட்சி தாயக அறுவடை மரநடுகை மற்றும் சுற்றாடல் வேலைத் திட்டம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் V.தவராஜா  கலந்து கொண்டு வைபவத்தை சிறப்பித்தனர். இந்நிகழ்வில்  சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் என்.விஜிதன், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு பொறுப்பான அபிவிருத்தித் உத்தியோகத்தர் T.கலாரூபி, சமூக அபிவிருத்தி உதவியாளர் எம்.என்.எம்.சாஜஹான்,  மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.







Comments