சிறுவர் தின நிகழ்வுகள் காத்தான்குடி பிரதேச செயலகத்தில்......

 சிறுவர் தின நிகழ்வுகள் காத்தான்குடி பிரதேச செயலகத்தில்......



நடளாவிய ரீதியில் சிறுவர் மற்றும் முதியோர் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் U.உதயசிறிதர் அவர்களின்  தலைமையில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகளை காத்தான்குடி பிரதேச செயலகமும் சமுர்த்தி பிரிவும் இணைந்த நடாத்தி இருந்தன.

 இதன் போது சிறுவர்களின் திறமையை வெளிக்கொனரும் நோக்குடன் கலை நிகழ்வுகள் இடம் பெற்றன. இதன் போது சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இத்துடன் சமுர்த்தி சிப்தொற புலமை பரிசிலுக்கான சான்றுப்பத்திரமும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.


 இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், சமுர்த்தி  தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தது விசேட அம்சமாகும்.







Comments