சமுர்த்தி பயனாளர்களுக்கு கை கொடுக்கும் சமுர்த்தி.......
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒரு விடயமாக சமுர்த்தி பயனாளிகளுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பாரிய பணியை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் செய்து வருகின்றது.
இதன் அடிப்படையில் ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மீராக்கேணி கிராமத்தில் சமுர்த்தி சௌபாக்கியா வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (31) அன்று பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏறாவூர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் A.M.நிஹாரா அவர்களும் கலந்து கொண்டனர்.
அடிக்கல் நாட்டப்பட்ட வீட்டின் பெறுமதி 10 லட்சம் ரூபாய் இவ்வீட்டுத்திட்டத்திற்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் 6,50,000 ரூபாவை வழங்குகின்றது. மிகுதி தொகையை சமுர்த்தி பயனாளியின் நிதியீட்டத்துடனும் கிராமத்தில் உள்ள தனவந்தர்களின் உதவியை பெற்று நிர்மானிக்க வேண்டும்.
இதன் பின் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட வீட்டுகளின் முன்னேற்றங்களையும் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் அவர்களும், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களும், கருத்திட்ட முகாமையாளர் A.M.நிஹாரா அவர்களும், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் மற்றும் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் பார்வையிட்டனர்.
Comments
Post a Comment