சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் கூட்டினைந்த சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்...

 சமுர்த்தி   அபிவிருத்தி திணைக்களத்தால் கூட்டினைந்த சமூக  அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்...........


சமுர்த்தி அபிவிருத்தி  திணைக்களத்தால் மக்களின் பங்கேற்பு அபிவிருத்தி முறையினைப்  பயன்படுத்தி கூட்டிணைந்த சமூக அபிவிருத்தி  வேலைத்திட்டத்தின் கீழ் மாதிரி கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அக்கிராமத்தில் காணப்படும் பல்வேறு பட்ட பிரச்சனைகளை  ஆலோசனைகள மற்றும் விழிப்புனர்வுகளை ஊட்டுவதன் மூலம் அக்கிராமத்தை வளம் மிக்க கிராமமாக உருவாக்கும் வேலைத்திட்டமாகும்.

இதற்காக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் வளவாளர் துறையில் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த  சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காணப்படும் பிரதேச செயலகத்தில் இருந்து  கிராமங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  மூன்று பிரதேச செயலகங்களில் இருந்த மூன்று கிராமங்கள்   தெரிவு செய்யப்பட்டுள்ளன.

1.வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் காந்திபுரம் கிராமம்

2.ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இருந்து காகிதநகர் கிராமம்

3.கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் இருந்து   பிறைந்துறைச்சேனை கிராமமும்  தெரிவாகியுள்ளது.

இவ்வாறு தெரிவாகியுள்ள  மாதிரி கிராமங்களில்  வளத்திரட்டுகள் தயார் செய்து போதைப்பொருள் தடுத்தல் தொடர்பான செயற்பாடுகள், பாடசாலை இடை விலகல் தொடர்பான செயற்பாடுகளை, சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான செயற்பாடுகள்,  புகைத்தல்  தடுத்தல் தொடர்பான செயற்பாடுகள், போசாக்கு பற்றிய குறைபாடுகள், வேலைவாய்ப்பு பற்றி  செயற்பாடுகள்  போன்ற பல்வேறு பிரச்சனைகளை கண்டறித்து இக்கிராம மக்களுக்கு விழிப்புனர்வு கருத்தரங்குகள்,  விரிவுரைகள் போன்றவற்றை நடாத்தி   ஒரு பயனுள்ள கிராமமாக மாற்றுவதாகும்.

இச்செயற்பாட்டை மையப்படுத்தி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட  பிறைந்துறைச்சேனை 206/C கிராமத்தில் போதையற்ற மகிழ்ச்சியான குடும்பங்களை ஏற்படுத்துவோம் எனும் விழிப்புனர்வு நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக  சமுர்த்தி தலைமை முகாமையாளர் S.A.M.பசீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்க வளவாளராக தாருஸ்ஸலாம் அறபுக் கல்லூரி விரிவுரையாளர் A.G.M.பெளமி அவர்கள் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார்.

 இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக  சமுர்த்தி  சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L.ஐயூப்கான் அவர்களும், கிராம உத்தியோகத்தர் A.L.ஜெளபர் அவர்களும், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் A.C.சாதிக்கீன்.மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்









Comments