வெளிநாடு செல்லும் தாய்மாரின பிள்ளைகள் பராமரிப்பு தொடர்பாக கருத்தரங்கு....
வறுமைகாரணமாக வெளிநாடுகளுக்கு சென்று தம் வாழ்வாதாரத்தை மேலோங்க செய்வதற்காக பயணமாகும் சமுர்த்தி பயனாளிகளின் பிள்ளைகளை பராமரிப்பது தொடர்பான விழ்ப்புனர்வு கருத்தரங்குகளை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி சமூகப் பிரிவால் பல கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனை மற்றும் செம்மண்ணோடை கிராம சேவகர் பிரிவுகளில் வெளிநாடு செல்லவுள்ள பெற்றார்களின் பிள்ளைகளைப் பராமரிப்பது தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு நடைபெற்றது. மாவடிச்சேனை கிராமத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் C.M.S.இஸ்மாயில் மற்றும் செம்மண்ணோடை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் V.T.பாஹிரா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயல சமுர்த்தி தலைமையா முகாமையாளர் S.M.Aபசீர் அவர்களும், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் M.L.A.மஜீத் அவர்களும், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் A.Lஐயூப்கான் அவர்களும், கிராம சேவையாளர்களான M.J.ஜெஸ்ரின் மற்றும் H.M.M.அமானுல்லஹ் அவர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் M.கபீர் அவர்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் M.S.அஜ்வத் அலி அவர்களும், போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களான M.H.முர்சிதீன், M.ரபீக் அவர்களும், பொதுசுகாதார பணிமனை உளநலப் பிரிவைச்சேர்ந்த R.மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment