சுபபொஜூன்ஹெல முன்னேற்றம் பற்றிய கலந்துரையாடல் ஏறாவூர் பிரதேச செயலகத்தில்.....
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிவேம்பு கிராமத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியில் அமைக்கப்பட்டுள்ள சுபபொஜூன்ஹெல ஆரோக்கிய உணவு விற்பனை நிலையத்தின் வேலைத்திட்டத்தினை கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன் இது தொடர்பாக ஏறாவூர் பற்று உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள்.
சுமார் 10 சமுர்த்தி பயனாளிகளை இணைத்து தாமாகவே உற்பத்தி செய்யும் ஆரோக்கிய உணவுகளை விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட விற்பனை நிலையம் தான் இந்த சுபபொஜூன்ஹெல ஆரோக்கிய உணவு விற்பனை நிலையம் ஆகும். சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் சில மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டு செயற்படும் இவ்நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிவேம்பு கிராமத்தில் நிறுவப்பட்டு செயற்பட்டு வருகின்றது. இதன் முன்னேற்றம் மற்றும் செயற்பாடுகள் பற்றிய ஒரு ஆய்வினை மேற் கொள்வதற்காக மட்டக்களப்ப மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களின் தலைமையிலான ஒரு குழு சென்று பார்வையிட்டு ஏறாவூர் உதவி பிரதேச செயலாளருடன் கலந்துரையாடியுள்ளனர். இதன் போது ஏறாவூர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைய மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் S.இராசலிங்கம் அவர்களும், சமூக அபிவிருத்தி உதவியாளரும், கருத்திட்ட உதவியாளருமான S.தவநீதன் அவர்களும், மாவடிவேம்பு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும் சுபபொஜூன்ஹெல நிலையம் முன்னேற்றம் மற்றும் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடினர்.
மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவு சார்பாக சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் கருத்திட்ட முகாமையாளர் அலி அக்பர் அவர்களும், சமுர்த்தி வங்கி பிரிவின் முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment