உணவு பாதுகாப்பு, குறைந்த வருமான மட்டத்தினை விருத்தி செய்தல் வேலைத்திட்டம்....
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறுபவர்களை உணவு பாதுகாப்பை மீளமைத்து அவர்களின் வருமான மட்டத்தினை விருத்தி செய்வதற்காக தேசிய உற்பத்த்தியை ஊக்குவிப்பதற்காக விசேட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அந்தந்த கிராமங்களில் உரிய காலநிலைக்கு ஏற்றவாறு பொருத்தமான பயிர்களை பயிரிடுவதற்கான நடவடிக்கையை மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு 2021ம் ஆண்டின் திட்டங்களில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் 50 பயனாளிகளை ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். இவர்கள் ¼ ஏக்கர் காணியை விட கூடிய காணியுடையவர்களாகவும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக பிரிவில் உணவு பாதுகாப்பு, குறைந்த வருமான மட்டத்தினை விருத்தி செய்தல் வேலைத்திட்டம் திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்வதற்கான ஒரு கள விஜயத்தினை கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் கருத்திட்ட முகாமையாளர் விஜிதன் அவர்களும், சமுர்த்தி சமூக அபிவிருத்தித் உதவியாளராக M.N.M.சாஜஹான் அவர்களும் சென்று வீட்டுத்தோட்ட பயிற்ச்செய்கையினை மேற் கொள்ள விருப்பமுடைய பயனாளிகளின் இடங்களை பார்வையிட்டனர்.
Comments
Post a Comment