சமுர்த்தி துரித பயிர்செய்கை அறுவடை......
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் துரித பயிர்செய்கை நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பித்தல் எனும் செயற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்குரிய காணிகளில் பயிர் செய்கை வேலைத்திட்டம் 2022.07.05 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அரச அதிபர் K.கருனாகரன் அவர்களின் தலைமையில் கல்லடி சமுர்த்தி வங்கியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் P.புவனேந்திரன் அவர்களும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் அடுத்த கட்டமாக 2022.07.06 அன்று பொதுக்காணிகளில் பயிர்செய்கை வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2022.07.07 அன்று ஒவ்வொரு கிராமத்திலும் 10 மாதிரி வீட்டுத்தோட்டத்தில் பயிர்செய்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2022.07.08 அன்று சமுர்த்தி அலுவலகங்கள், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீடுகளில் பயிர்செய்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வேலைத்திட்டம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறையை ஓரளவேனும் தீர்த்து வைக்கப்படுவதற்காக அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
இதன் முன்னேற்றகரமான ஒரு செயற்பாடாக அன்மையில் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான் கிழக்கு கிராமத்தில் பொதுக்காணியில் பயிரிடப்பட்ட பயிர்களின் அறுவடை நிகழ்வு கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் S.ராஜ்பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.சிவபாதசேகரம் அவர்களும், கருத்திட்ட முகாமையாளர்கள், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment