மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறுவர் முதியோர் தின் நிகழ்வு.....

 மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறுவர் முதியோர் தின் நிகழ்வு.....


ஒக்டோபர்-01 சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தையோட்டி மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் சமுர்த்தி பிரிவும் இணைந்து சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் (01) அன்று நடாத்தியது.



 மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை உளநல வைத்திய நிபுனர் Dr.J.சகாயதர்சினி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

 இதன் போது சிறுவர்களின் கலை நிகழ்வுகளும், முதியோரின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் நிகழ்வுகளில் கலந்து கொண்டோருக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் M.R.சியாஹுல் ஹக் அவர்களும், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.பரமலிங்கம் அவர்களும், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.














Comments