சமுர்த்தி பிரிவால் போதைப்பொருள் பாவனைபற்றிய விழிப்புனர்வு செயலமர்வு........
சமூகத்தில் நல்ல பிரஜைகளை உருவாக வேண்மென்றால் பாடசாலைகளிலேயே சிறந்த தளமாக அமைய வேண்டும். எனவே பாடசாலை மட்டத்தில் தற்போது மேலோங்கி இருக்கும் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான ஒரு விழப்புனர்வு செயற்பாட்டை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவால் தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது. பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் பாவனையாலிருந்து மீண்டெடுப்பதை உளவளத்துறை ஊடாக செயற்படுத்துவதற்கான விழிப்புனர்வு செயலமர்வே நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வானது தியாவெட்டுவான் சமுர்த்தி உத்தியோகத்தர் N.M. முகம்மட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.A.M.. பசீர் அவர்களும், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் M.L.A.மஜீத் அவர்களும், அறபா வித்தியாலய பிரதி அதிபர் பிர்னாஷ் அவர்களும், அறபா வித்தியாலய பதில் அதிபர் M.M.M.அன்வர்சாதாத் அவர்களும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L.ஐயூப்கான் அவர்களும், மற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களான M.H.முர்சிதீன், M.ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment