நகையானின் சதத்தால் அரையிறுதிக்கு தெரிவாகிய அறபா கல்லூரி......
இலங்கை பாடசாலை மட்ட 17 வயதிற்குபட்ட போட்டியில் ஏறாவூர் அறபா கல்லூரியின் H.R.M.நகையானின் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் 53 ஓட்டங்களால் குருநாகல் உஹூமியா D.S.சேனநாயக்கா தேசிய பாடசாலையை வெற்றி கொண்டு மற்றுமொரு அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் அறபா கல்லூரி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஒரு கட்டத்தில் D.S.சேனநாயக்கா தேசிய பாடசாலையின் மிதுமின சம்மருகனின் அற்புதமான பந்து வீச்சில் ஏறாவூர் அறபா கல்லூரி 38 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய போது, தன் சிறந்த துடுப்பாட்டத்தால் தன் பாடசாலையை அடுத்த நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் H.R.M.நகையான் அவர்கள். H.R.M.நகையான் அவர்கள் 105 பந்து வீச்சுக்களை எதிர் கொண்டு 113 ஓட்டங்களை பெற்று தன் சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். இதில் 15 நான்கு ஓட்டங்களும், 04 ஆறு ஓட்டங்களும் அடங்கும் , மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான I.M.ஆதில் 87 பந்து வீச்சுக்களில் 17 ஓட்டங்களை பெற்று H.R.M.நகையான் அவர்களுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தார். H.R.M.நகையான் அவர்கள் தனி ஒரு மனிதனாக நின்று தன் பாடசாலைக்கு மற்றுமொரு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். H.R.M.நகையான் கிழக்கு மாகான அணிக்காக விளையாடுவதற்காக அன்மையில் தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். பந்து வீச்சில் D.S.சேனநாயக்கா தேசிய பாடசாலை சார்பாக மிதுமின சம்மருகன் மிச்சிறப்பாக பந்து வீசி 24 ஓட்டங்களுக்கு 06 விக்கெட்டுக்களையும், அகில் சம்பந்த் 41 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தார்.
பந்து வீச்சில் ஒரு கலக்கு கலக்கிய D.S.சேனநாயக்கா தேசிய பாடசாலை துடுப்பாட்டத்திலும் கலக்கும் என எதிபார்ப்புடன் களம் நுழைந்த போது M.N.M.பஜிஸின் சிறந்த பந்து வீச்சால் 31.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களுக்குள் சுருண்டு கொண்டது. துடுப்பாட்டத்தில் D.S.சேனநாயக்கா தேசிய பாடசாலை சார்பாக அகில் சம்பத் மாத்திரம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 21 பந்து வீச்சுக்களில் 19 ஓட்டங்களை வேகமாக பெற்றுக் கொடுத்தார், இதில் 03 நான்கு ஓட்டங்களும் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். பந்து வீச்சில் ஏறாவூர் அறபா கல்லூரி சார்பாக M.N.M.பஜீஸ் 12 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தனர்.
இதன் அடிப்படையில் ஏறாவூர் அறபா கல்லூரியின் 17 வயதிற்குட்பட்டோருக்கான அணி அரையிறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளதை மகிச்சியுடன் அறிய தருகின்றோம்.
Comments
Post a Comment