சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை தேசிய மரநடுகை வேலைத்திட்டம் கோரளைப்பற்று தெற்கு செயலகத்தில்...............

  சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை தேசிய மரநடுகை வேலைத்திட்டம் கோரளைப்பற்று தெற்கு செயலகத்தில்...............



சமுர்த்தி திணைக்களத்தினால் சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை எனும் தொனிப்பொருளில் தேசிய மரநடுகை  வேலைத்திட்டம்  2022.09.17ம் திகதி தொடக்கம் 2022.09.23ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு பிரதேச செயலாளர் S.ராஜ்பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு  நீண்ட காலம் பயன்தரக் கூடிய  மரங்களை நட்டு வைத்தார். 

இந் நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர்  அவர்களும், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர்  அவர்களும்,  சமுர்த்தி வங்கி முகாமையாளர்  அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர்  அவர்களும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்இ சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர்இ பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.





Comments