துரித பயிர்செய்கையின் அறுவடை நிகழ்வு......
துரித பயிர்செய்கை நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பித்தல் எனும் செயற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்குரிய காணிகள், பொதுக்காணிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பயிர் செய்கை வேலைத்திட்டம் 2022.07.05 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அரச அதிபர் K..கருனாகரன் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இவ்வாறு பயிரிடப்பட்ட பயிகளின் அறுவடை அன்மையில் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான் கிழக்கு கிராமத்தில் செந்தாமரை சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு மேற் கொண்ட பொதுக்காணியில் அறுவடை நடைபெற்றது.
கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் S.ராஜ்பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு அறுவடை நிகழ்வை தொடக்கி வைத்தர்.
இந்நிகழ்வில் கோரளைப்பற்று தெற்கு உதவி பிரதேச செயலாளர் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவிற்கு பொறுப்பான முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ் அவர்களும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment