புன்னக்குடா கடற்கரை சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பால் சுத்தப்படுத்தல்......
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து 2022ம் ஆண்டில் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தின் பொருட்டு, சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்தை முன்னிட்டு, கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலை திட்டம் செப்டெம்பர் 17 தொடக்கம் செப்டம்பர் 23 வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறை படுத்தப்படவுள்ளது.
இதன் அடிப்படையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புன்னக்குடா கிராம கடற்கரை பிதேசத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் K.தனபாலசுந்தரம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளரும், முகாமைத்துவ பணிப்பாளருமாகிய S.இராசலிங்கம் அவர்களின் தலைமையில் கீழ் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உதவியுடன் கடற்கரை ஓரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் (19) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டமானது இதனை தொடர்ந்தும் பல்வேறு இடங்களில் செயற்படவுள்ளது அதன் விபரம் கீழ் வருமாறு
2022.09.20 – நாவலடி
2022.09.21 - கல்லாறு, களுதாவளை
2022.09.22 – கல்குடா, கிரான், மாங்கேணி
2022.09.23 – காயாண்கேணி போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது
Comments
Post a Comment