கல்லடி கடற்கரையை சுத்தம் செய்த மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள்.....

 கல்லடி கடற்கரையை சுத்தம் செய்த  மண்முனை வடக்கு  பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள்.....



நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து 2022ம் ஆண்டில் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு வாரத்திற்கு கடற்கரையை அன்டிய பிரதேசங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைபடுத்தி வருகின்றது.  சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்தை முன்னிட்டு இச் செயற்பாடு  செப்டெம்பர் 17 தொடக்கம் செப்டம்பர் 23 வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறை படுத்தப்படவுள்ளது. இதற்கமைய செப்டம்பர் (19) புன்னக்குடா கடற்கரையை அன்டிய பிரதேசம் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினால் சுத்தம் செய்யப்பட்டது.

இதன் மற்றுமொரு செயற்பாடாக மண்முனை வடக்கு  பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லடி கடற்கரை பிரதேசத்தை மண்முனை வடக்கு  பிரதேச செயலாளர் V.வாசுதேவன்  அவர்களின் வழிகாட்டலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.பரமலிங்கம் அவர்களின் தலைமையில் கீழ் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உதவியுடன் கல்லடி கடற்கரையை அன்டியஇடங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் (20) அன்று ஆரம்பித்து நடைமுறைபடுத்தப்பட்டது. இவ்வேலைத்திட்டமானது  தொடர்ந்தும் 23ம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

2022.09.21 - கல்லாறுஇ களுதாவளை

2022.09.22 – கல்குடாஇ கிரான், மாங்கேணி

2022.09.23 – காயாண்கேணி  போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது






Comments