கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடியில்) பிரதேச செயலகத்தில் சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கி வைப்பு....
கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடியில்) பிரதேச செயலகத்தில் சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கி வைப்பு....
சமுர்த்தி திட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் பயனுகரிகளின் பிள்ளைகள் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் சகல மாணவர்களுக்கும் 24 மாதங்களுக்கு 1500 ரூபாய் என்கின்ற அடிப்படையில் இப்புலமை பரிசில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மேற்கு(ஓட்டமாவடி) பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட சமுர்த்தி நிவாரனம் பெறும் பயனாளிகளின் குடும்பங்களில் இருந்து சுமார் 154 மாணவ, மாணவிகளுக்கு சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் சான்றிதழ்களை கோறளைப்பற்று மேற்கு(ஓட்டமாவடி) பிரதேச செயலாளர் V.தவராஜா அவர்கள் வழங்கி வைத்தார்.
கோறளைப்பற்று மேற்கு(ஓட்டமாவடி) பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் ஓட்டமாவடி மேற்கு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலாளர் V.தவராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புலமை பரிசில் சான்றுகளை வழங்கி வைத்து, உரையாற்றுகையில் இக்கால கட்டத்தில் கல்வி கற்கும் ஒவ்வொருவருக்கும் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும். உயர்தரம் கற்பதற்கு தற்போது மிகப்பெரிய தொகையை மாதாந்தம் பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக செலவு செய்கின்றனர், இருந்த போதிலும் அதில் ஒரு பங்கை ஈடுசெய்வதற்கு சமுர்த்தி திட்டம் உதவுகின்றது என்றால் அது அக் குடும்பத்திற்கு பாரிய நன்மையான விடயமாகவே காணப்படுகின்றது என்றார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு(ஓட்டமாவடி) பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.அல்அமீன் அவர்களும், கணக்காளர் எஸ்.ஏ.ஸஜ்ஜாத் அஹம்மட் அவர்களும், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் அவர்களும், வங்கி முகாமையாளர் பி.எம்.சிஹான் அவர்களும், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் எம்.என்.எம்.சாஜஹான் அவர்களும், விடய பொறுப்பு உத்தியோகத்தர் ஏ.ஆர்.சம்சுதீன், சமுர்த்தி கள உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment