அடுத்தடுத்து இரண்டு சமுர்த்தி வீடுகள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் பயனாளியிடம் கையளிப்பு......
அடுத்தடுத்து இரண்டு சமுர்த்தி வீடுகள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் பயனாளியிடம் கையளிப்பு......
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் பல்வேறு வீட்டுத்திட்டங்களால் வறிய சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட காகிதநகர் 210/B கிராம பிரிவைச் சேர்ந்த ஹ.மு. றிஸ்னா என்பவரின் வீட்டு வேலைகளை பூரணப்படுத்தப்பட்டு அவரிடம் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலாளர் V.தவராஜா அவர்களினால் உரிய பயனாளியிடம் கையளிக்கப்ட்டது.இவ்வீட்டை அமைப்பதற்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் 225,000 நிதி வழங்கப்பட்டது, மிகுதி பணம் பயனாளியின் பங்களிப்பாக இடப்பட்டு முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதே போல் மற்றுமொரு வீட்டினையும் அன்றைய தினமே கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலாளர் V.தவராஜா அவர்களால் காகிதநகர் 210/B கிராம பிரிவைச் சேர்ந்த அ.மு.றுக்கியா உம்மா என்பவரின் வீடு திருத்தியமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இவ்வீட்டு திட்டத்திற்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் 125,000 நிதியினை வழங்கி இருந்ததுடன் மிகுதி பணத்தை சமுர்த்தி பயனாளியின் பங்களிப்பாக இடப்பட்டு முடிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ்வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் M.I.A.அஸீஸ் அவர்களும், கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தித் உதவியாளர் M.N.M.சாஜஹான் மற்றும் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தித் உத்தியோகத்தர் M.L.சியாத் ஆகியோரும் கலந்து கொண்டனர் .
Comments
Post a Comment