சமுர்த்தி சிறுவர் கழக கூட்டம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில்....
சமுர்த்தி திட்டத்தில் மற்றுமொரு ஆளுமைமிக்க செயற்பாடே எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நோக்குடன் சிறுவர் கழகங்களை கிராமம் தோறும் உருவாக்குதல் ஆகும். இதன் மூலம் சிறந்த தலைமைத்துவத்தையும், சிறந்த ஆளுமையையும், சிறந்த கலை திறமைகளையும் சிறுவர் மத்தியில் ஏற்படுத்த முடியும் என்கின்ற நோக்கில் சமுர்த்தி திணைக்களம் செயற்படுகின்றது. கிராமங்கள் தோறும் உருவாக்கப்படும் சிறுவர் கழகங்கள் வலய மட்டம், பிரதேச செயலக மட்டங்களாக வலுப்பெற்று செயற்படுகின்றது. சமுர்த்தி அபிவிருத்தி தினைக்களம் வருடந்தோறும் சிறுவர் போட்டிகள், சிறுவர் சேமிப்பு திட்டங்கள், சிறுவர் தலைமைத்துவ பயிற்சிகளை நடாத்தி வருகின்றது.
இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக பிரிவின் கீழ் செயல்படும் பிரதேச சிறுவர் கழகத்திற்கான கூட்டம் (11) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தித் உதவியாளர் M.N.M.சாஜஹான் அவர்களும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் சபூஸ்பேகம் அவர்களும் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு எவ்வாறன நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது தொடர்பாக ஆராயப்படுவதற்காக கூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment