டெனிஸ் போட்டியில் சிவானந்தா சாதனை வெற்றி......

 டெனிஸ் போட்டியில் சிவானந்தா சாதனை வெற்றி......



இலங்கை கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் ஒழுங்கமைத்து நடாத்தப்பட்ட 14 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய டெனிஸ் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை அபரா வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை  தனதாக்கி கொண்டது.

இலங்கை கல்வி அமைச்சால் ஒழுங்கமைத்து நடாத்தப்பட்ட 14 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய டெனிஸ் போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை  கொழும்பு ஆனந்தா கல்லூரியை இறுதிப்போட்டியில் சந்தித்து வெற்றி பெற்றுள்ளது.

இச்சுற்றுப் போட்டியில்  இலங்கையில் உள்ள பல பிரபல பாடசாலைகள் பங்குபற்றி இருந்தன, இருந்த போதிலும் பலம் வாய்ந்த கொழும்பு ஆனந்தா கல்லூரியை வெற்றி கொண்டு மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளனர் சிவானந்தா தேசிய பாடசாலை மாணாக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.







Comments