மட்டு மாவட்ட செயலக மின்னிதழ் செய்தி மடலுக்கு சமுர்த்தி பணிப்பாளர் வாழ்த்து....

 மட்டு மாவட்ட செயலக மின்னிதழ் செய்தி மடலுக்கு சமுர்த்தி பணிப்பாளர் வாழ்த்து....




மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் (01) அன்று முதல் தடவையாக  மின்னிதழ் செய்தி மடல் மாவட்ட அரச அதிபர் K.கருனாகரன் அவர்களால் மாவட்ட செயலக கேட்பேர் கூடத்தில்  கானொளி மூலம் வெளியிடப்பட்டது. இம்  மின்னிதழ் செய்தி மடலுக்கு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியை வழங்கியுள்ளார். இவ்வாழ்த்துச் செய்தியில் ''இச் செய்தி மடல் மூலம் எதிர்கால சந்ததியினரும் பயன் பெறுவர்கள்'' எனும் தலைப்பின் கீழ் தன் வாழ்த்துச் செய்தியை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஊடக பிரிவால் வெளியிடப்பட்டுள்ள இச் செய்தி மடல் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் பல விடயங்களை நாம் இனி வரும் காலங்களில் அறிய முடியும். ஆகவே இச் செயற்பாட்டில் முழு மூச்சாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊடக பிரிவிற்கு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரிவின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இச் செய்தி மடலானது மாதமொரு முறை எமது மாவட்ட செய்திகளை தாங்கி வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி....




Comments