ஓட்டமாவடி சமுர்த்தி வங்கிச்ச ங்கம் மற்றும் சமுர்த்தி வங்கியை பார்வையிட்ட மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்....

 ஓட்டமாவடி சமுர்த்தி வங்கிச்சங்கம் மற்றும் சமுர்த்தி வங்கியை பார்வையிட்ட மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்....



மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவகேந்திரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் பிரதேச செயலகங்கள், சமுர்த்தி வங்கிகள் மற்றும் சமுர்த்தி  வங்கிச்சங்கங்கள்  போன்றவற்றை நேரடியாக சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில் (31) வாகரை பிரதேச செயலகத்திற்கான விஜயயத்தினை மேற் கொண்டு அங்கு மேற் கொள்ளப்படும் பணிகள் பற்றி கலந்துரையாடி மிக விரைவாக மக்களுக்கான சேவையை வழங்குமாறு சமுர்த்தி முகாமையாளர்களுக்கும், சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓட்டமாவடி சமுர்த்தி வங்கிச் சங்கத்திற்கும், ஓட்டமாவடி மேற்கு சமுர்த்தி வங்கிக்கும் விஜயத்தினை மேற் கொண்ட மாவட்ட பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் வங்கி நடவடிக்கைகளை பார்வையிட்டதுடன், மக்களுக்கான சேவை பற்றியும் கலந்துரையாடினர். மிக  விரைவாக கொடுப்பணவுகளை வழங்கி வைப்பதோடு, மக்களுக்கான சமூக காப்புறுதி விடயத்தில் மிக கவனமாக செயற்பட்டு மக்களுக்கான நிவாரனத்தை வழங்குமாறு கூறியுள்ளனர். இதன் பின் சமுர்த்தி வங்கிச் சங்கத்திற்கு விஜயத்தினை மேற் கொண்ட அவர்கள் அங்கு வழங்கப்படும் செயற்பாடுகளை பார்வையிட்டனர்.

இக்கள விஜயத்தின் போது மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவிற்கான முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ் அவர்களும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இனிவரும் காலங்களில் இதே போல் 13 பிரதேச செயலகங்களுக்கும், 13 சமுர்த்தி வங்கிச் சங்கங்களுக்கும், 30 சமுர்த்தி வங்கிகளுக்கும் இக்குழுவினர் செல்லவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவகேந்திரன் அவர்கள் தெரிவித்தார்.










Comments