ரபீஸின் சதாத்தால் 325 ஓட்ட எண்ணிக்கையை தொட்ட அறபா கல்லூரி......
இலங்கை பாடசாலை மட்ட 17 வயதிற்குபட்ட (Div-III) போட்டியில் ஏறாவூர் அறபா கல்லூரி 325 ஓட்டங்களை பெற்று யாழ் தெல்லிப்பளை மஹாஜன கல்லூரியை 173 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர் அறபா கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரபீஸ் அவர்களின் துடுப்பாட்டத்தின் உதவியுடன் அறபா கல்லூரி இப்பாரிய ஓட்டத்தை பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் அறபா கல்லூரி 50 ஓவாக்ளில் 05 விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ரபீஸ் 147 பந்து வீச்சுக்களில் 133 ஓட்டங்களை பெற்று தன் சதத்தை பூர்த்தி செய்து கொண்டார், மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான சவ்பாகி 71 பந்து வீச்சுக்களில் 73 ஓட்டங்களை அதிரடியாக ஆடி அவரது அரை சதத்தை பூர்த்தி செய்ய, மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான நகையான் 40 பந்து வீச்சுக்களில் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் யாழ் தெல்லிப்பளை மஹாஜன கல்லூரி சார்பாக ராக சியான் 21 ஓட்டங்களுக்கு 01 விக்கெட்டையும், ஜோவேல் ரொசான் 49 ஓட்டங்களுக்கு 01 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்hடிய யாழ் தெல்லிப்பளை மஹாஜன கல்லூரி 37.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கான 152 ஓட்டங்களை மாத்திரம பெற்று 173 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக் கொண்டது. துடுப்பாட்டத்தில் வொசிங்டன் 32 பந்து வீச்சுக்களில் 41 ஓட்டங்களை வேகமாக பெற்றுக் கொடுக்க, துளசியன் 59 பந்து வீச்சுக்களில் 36 ஓட்டங்களையும், ராக சியான் 33 பந்து வீச்சுக்களில் 13 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் ஏறாவூர் அறபா கல்லூரி சார்பாக பஜீஸ் 25 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டினையும், சவ்பாகி 23 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டினையும், சகீம் 26 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தனர்.
இதன் அடிப்படையில் ஏறாவூர் அறபா கல்லூரி 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் அடுத்த சுற்றுக் தெரிவாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
Comments
Post a Comment