3.இலங்கை கிரிக்கெட்டில் களுத்துறை மனோ பொன்னையாவின் கலக்கள்...... இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய தழிழர்கள்...........

  3.இலங்கை கிரிக்கெட்டில் களுத்துறை மனோ பொன்னையாவின் கலக்கள்...... இலங்கை  கிரிக்கெட் அணியில் விளையாடிய தழிழர்கள்........... 

மனோ பொன்னையா 1943 மே மாதம் 03ம் திகதி களுத்துறையில் பிறந்த ஒரு தமிழர் இவரின் முழுப்பெயர்  சாள்ஸ் எட்வேட் மனோகரன் பொன்னையா என்பதாகும். களுத்துறையில் இவர் பிறந்தாலும் ஆரம்பம் முதலே  கொழும்பில் குடியேறி கல்கிசை சென் தோமஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து, பின்னர் இலங்கை பல்கலைகழகத்தில் பொருளியல் துறையில் கல்வி கற்று பட்டம் பெற்றார். 1963ல் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் போது P.சரவணமுத்து கின்னத்தை வெற்றி பெறுவதற்கு ஒரு காரண கர்த்தாகவும் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதே ஆண்டிலேயே சிலோன் அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட விரராக களம் கண்டவர் இவர் ஒரு வலது கை துடுப்பாட்ட வீரரும் ஒரு வலது கை லெக் பிரேக் பந்து வீச்சாளராகவும் தன்னை நிரூபித்துக் கொண்டவர்.

 1963/64 காலப்பகுதியில் மெட்ராஸ் அணிக்கெதிராக கோபாலன் கிண்ணத்திற்கான முதல்தர போட்டியில் சிலோன் அணிக்காக அறிமுகமாகி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இரண்டாவது இனிங்சில் களம் இறங்கி  76.1 ஓவர்களும் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் பின்னர் 1964/65ம் ஆண்டுகளில் இந்தியாவிற்கான ஒரு பயணத்தை சிலோன் அணி மேற் கொண்ட போது அவர் கலந்து கொண்டு ஏழு போட்டிகளில் பங்கேற்று 325 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதன் பின் 1966ல் கேம்பரிச்சில் உள்ள இம்மனுவல் பல்கலை கழகத்தில் கல்வி கற்க சென்றார். அச்சமயம் 1967-1969 வரையான காலத்தில் கேம்பிரிச் பல்கலை கலகத்திற்காக தம் பங்களிப்பை வழங்கி இருந்தார். 1967ம் ஆண்டு 13 போட்டிகளில் விளையாடி 800 ஓட்டங்களை குவித்தது பெருமைக்குரிய விடமாகும். இதன் போது மிடில்செக்ஸூக்கு அணிக்கு எதிரான போட்டியில் 98 ஓட்டங்களை பெற்றது இப்போட்டியின் இவரது அதிகபட்ச ஓட்டமாகும். இதே போட்டியில் ஆரம்ப துடுப்பாட் வீரராக ரோஜர் நைட்டுடன் இணைந்து 194 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது விசேட அம்சமாகும்.

 இதே சமயம் 1968ம் ஆண்டு இங்கிலாந்திற்கான ஒரு பயணத்தை இலங்கை அணி மேற் கொள்ள இருந்தது. இவ்வணியில் மனோ பொன்னையா தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இருந்த போதிலும் துரிதிஸ்ட வசமாக இறுதி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது கவலையான விடயமாகவே இருந்தது.

1968ல் கேம்பிரிச் பல்கலை கழகம் எந்த போட்டியிலும் வெற்றிபெறவில்லை.  ஒரு முக்கியமான ஒரு போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது, குறைவான ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்கள் வீழ்ந்து கொண்டே இருந்தன, இந்தப்போட்டியின் முதுகெழும்பாக மனோ பொண்னையா திகழ்ந்தார். முதல் இனிங்சில் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களையும், இரண்டாவது இனிங்சில் 67 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார். ஆனால் இவரது அணியில் உள்ளவர்கள் அனைவரும் இனைந்து முதல் இனிங்சில் 93 ஓட்டங்களையும், இரண்டாவது இனிங்சில் 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

1969ல் அவரது கடைசி போட்டியானது ஒக்ஸ்போட் பல்கழகத்திற்கெதிராக ஆடி இருந்தார். இப்போட்டியிர் இவர் 27 மற்றும் 50 ஓட்டங்களை பெற்றதுடன் ரோஜர் நைட்டுடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 92 நிமிடங்களில் 123 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது விசேட அம்சமாகும். இந்த சமயத்தில் 1971ல் ராதிகா என்பவரை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையானார்.

இவர் 45 முதல்தர போட்டிகளில் 87 இனிங்சில் விளையாடி 1978 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 08 தடவைகள் ஆட்டமிழக்காத சந்தர்ப்பத்தை தனதாக்கி கொண்டார். தனிப்பட்ட ஓட்டமாக ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட இவர், ஒரு சதம் 11 அரைச்சதங்களையும், 12 பிடியேடுப்புக்களையும் கைப்பற்றியுள்ளார். பந்து  வீச்சை பொறுத்த மட்டில் மொத்தமாக 06 விக்கெட்டுக்களை சாய்துள்ள இவரின் சிறந்த பந்து வீச்சு பிரதியாக 20 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை தன் வசம் வைத்துள்ளார்.

1990 வரை இங்கிலாந்தில் வசித்து வந்த மனோ பொன்னையா அதன் பின்னர் இலங்கையில் குடியேறி பொன்னையா & அசோசியேட்டஸ் எனும் கட்டிடக்கலை நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனம் பல விருதுகளை வென்ற நிறுவனமாக இயங்கி வருகின்றது.

 இத்துடன் மூன்று தமிழர்கள் இலங்கை அணிக்கு அர்பணமான சேவையை வழங்கியதை பார்த்துள்ளோம்.... 

 இது போன்ற இன்னும் பல தமிழ் கிரிக்கெட் வீரர்கள் தம்மை அர்பணித்து இலங்கை கிரிக்கெட்டுக்காக விளையாடி உள்ளனர் மற்றுமொரு வீரரரின் சாதனையை அடுத்த தொடரில் பார்ப்போம்........


Comments