இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய தழிழர்கள்........... 2.மட்டக்களப்பின் தேவராஜ் 1964ல் இலங்கை கிரிக்கெட் அணியில்......
இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய தழிழர்கள்...........
2.மட்டக்களப்பின் தேவராஜ் 1964ல் இலங்கை கிரிக்கெட் அணியில்......
கடந்த தொடரில் வெற்றித்தழிழன் மகாதேவன் சதாசிவத்தின் வெற்றி முழக்கங்களை பார்த்தோம், அதே போல் இன்று மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட தமிழரான C.T.முத்தையா தேவராஜ் இலங்கை அணியில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியுள்ளார் என்பதை பார்ப்போம்.
இவர் 1938 ஆகஸ்ட் 16ம் திகதி மட்டக்கப்பில் பிறந்து பின்னர் கொழும்பில் குடியேறியுள்ளார். இதில் ஒரு பெருமை என்னவென்றால் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட ஒருவர் 1964ம் ஆண்டிலேயே இலங்கை அணிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்பது தான். மட்டக்களப்பில் பிறந்த இவர் பிற்காலத்தில் கொழும்பில் குடியேறி அங்கேயே வசிக்கத் தொடங்கி விட்டார். கொழும்பு சாஹிரா கல்லூரியில் கல்வி கற்ற இவர் 1958ல் சாஹிரா கல்லூரியின் கிரிக்கெட் அணிக்கு தலைவராகவும் செயற்பட்டுள்ளார். ஒரு மத்திய வரிசை துடுப்பாட்ட காரரரான இவர் 1964/1965 காலங்களில் சிலோன் அணியுடன் இந்தியாவிற்கான விஜயத்தினை மேற் கொண்டு இருந்தார். அங்கு மெட்டாஸ் அணிக்கெதிரான போட்டியில் பங்குபற்றி 85 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார், இது இப்போட்டிகளில் இலங்கை அணியினர் சார்பாக பெற்றுக் கொண்ட தனிநபர் அதிக ஓட்டங்களாகும்.
இவர் பல முறை கௌரவிக்கப்பட்டார். இருந்த போதிலும் இலங்கை நாட்டிற்கு சர்வதேச தரத்திற்கான அங்கீகாரம் வழங்குவதற்கு முன் இவர் பெறுமதியான சேவையை வளர்ந்து வரும் இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்கினார், என இவர் உட்பட 49 கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு மாபெரும் கௌரவிப்பு 2018 செப்டம்பர் மாதத்தில் இவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது விசேட அம்சமாகும்.
இன்றும் இவரின் சாதனைகளால் தங்கள் பாடசாலையின் பெயர் மேலோங்கி இருப்பதை கொழும்பு சாஹிரா கல்லூரி மறந்து விடவில்லை எனவே இவரை அன்மையில் அழைத்து இவரை சிறப்பாக கௌரவித்து இருந்தது.
இப்படி ஒரு கிரிக்கெட் வீரர் மட்டக்களப்பில் பிறந்து முதல்தர கிரிக்கெட் விளையாட்டில் தம்மை ஈடுபடுத்தி கொண்டார் என்பதை யார் தான் அறிவார்கள். தேடல் பல வித்திடும் அதில் இதும் ஒன்று இன்னும் பல தழிழ் கிரிக்கெட் வீரர்கள் இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்கிய சேவைகளின் தகவலை தேடுவோம் உலகெங்கும் பறைசாற்றுவோம்.
இன்னுமொரு தழிழ் கிரிக்கெட் வீரர் சாதனையை இனிவரும் காலத்தில் பார்ப்போம்........
Comments
Post a Comment