காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 161 சிப்தொற புலமை பரிசில்கள்....
நாடளாவிய ரீதியில் 2021-2022 ஆண்டுக்கான சமுர்த்தி சிப்தொற புலமை பரிசில் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயகத்தில் 161 சமுர்த்தி நிவாரனம் பெறும் குடும்பங்களில் உள்ள மாணவர்களின் உயர்கல்விக்கு உதவியாக அவர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சிப்தொற எனும் புலமைபரிசில் (22) அன்று வழங்கி வைக்கப்பட்டது. இப்புலமை பரிசில் திட்டமானது சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக பாதுகாப்பு நிதியத்தின் மூலம் வழங்கப்படுகின்றது ஒவ்வொரு மாணவர்களுக்கும் 24 மாதங்களுக்கு மாதாந்தம் 1500 ரூபாய் வீதம் இந்நிதி வழங்கப்படவுள்ளது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயசிறிதர் அவ்களின் தiலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிப்தொற புலமைபரிசிற்கான சான்றை வழங்கி வைத்தார். இத்துடன் இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜா அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பொறுப்பான முகாமையாளர் S.பிரதீபன் அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மற்றுமொரு நிகழ்வான பசுமைப்புரட்சி தாயக அறுவடை எனும் கருப்பொருளில் சமுர்த்தி திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வானது காத்தாண்குடி 164/A பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை பொது மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பயன்தரும் மரங்களை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயசிறிதர் அவர்கள் நடப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும் இந்நிகழ்வில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள் கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொணண்டனர்.
Comments
Post a Comment