கல்லடி சமுர்த்தி வலயத்திற்குட்பட்ட 13 கிராமங்களில் சிரமதானம் பணிகள்......

 கல்லடி சமுர்த்தி வலயத்திற்குட்பட்ட 13 கிராமங்களில் சிரமதானம் பணிகள்......



மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கல்லடி சமுர்த்தி வலயத்திற்குட்பட்ட  13 கிராம சேவகர் பிரிவுகளில் (08) அன்று  காலை 7.30 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை சிரமதான பணிகள் இடம்பெற்றன. 

இந்நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் V.வாசுதேவன் அவர்களின் தலைமையிலும்,  வழிகாட்டுதலுடனும் மண்முனை வடக்கு பிரதேச செயலக  உதவி பிரதேச செயலாளர் M.R.சியாஹுல் ஹக் அவர்களின்  நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது. இச்சிரமதான பணிகளில் மண்முனை வடக்கு பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கல்லடி வயத்திற்குட்பட்ட 13 கிராம சேவகர் பிரிவுகளின் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி  உத்தியோகத்தர்களுடன்   கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.

மேலும் இந்த சிரமதான நிகழ்வின் போது தற்போது பாவனையில் இல்லாத அரச கட்டிடங்கள், காணிகள், பாடசாலைகள் ஆகிய இடங்களில் காணப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டதுடன், அலுவலகங்களில் காணப்பட்ட குடிநீர் பாவணைக்கான கிணறுகள், மலசல கூடங்கள், மின்சாரம், சுற்றுவேலிகள் மற்றும் உட்புற சூழலின் குறைபாடுகள் இனம் காணப்பட்டு உரிய முறையில் சீர்செய்யப்பட்டது. அத்துடன் மிக முக்கியமாக சுற்றுப்புறச்சூழலில் பூமரங்கள் மற்றும் பயன்தரும் மரங்களும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


















Comments