ஒரே தடவையில் 05 சமுர்த்தி வீடுகள் பயனாளிடம் கையளிப்பு......
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சௌபாக்கியா 650000 ரூபாய் பெறுமதியான 03 வீடுகள், 225000 ரூபாய் பெறுமதியான 03 வீடுகள் 125000 ரூபாய் பெறுமதியான 03 திருத்த வீடுகள் என 09 வீடுகள் சமுர்த்தி செளபாக்கியா 2022 வீடமைப்பு திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிற்கு வழங்கப்பட்டிருந்தது. அவ்வீடுகளில் 05 வீடுகள் பூர்த்தியாக்கப்பட்டு சமுர்த்தி பயனாளிகளிடம் (21) அன்று கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் அவர்களால் பயணாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர் அவர்களும், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத் அவர்களும், சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப் அவர்களும், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் அவர்களும், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு மிகவும் குறுகிய காலத்தில் முதல் கட்டமாக இந்த 05 வீடுகளை முடிவுறுத்தி சமுர்த்தி பயனாளியடம் ஒப்படைத்துள்ளது எனவே அவர்களுக்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment