இன்று சர்வதேச முதியோர் சிறுவர் தினமாகும் 01.10.2022......
ஆண்டு ரீதியாக ஒக்டேபர் முதலாம் திகதியை சர்வதேச முதியோர் சிறுவர் தினமாக பிரகடணப்படுத்தி, இந்நாட்களில் முதியோர் சிறுவர்களை கௌரவித்து விசேட பரிசில்களும் வழங்கப்பட்டும் வருகின்றன. இதில் முக்கியமாக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களான முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு விசேட கொடுப்பணவுகள் பரிசில்களை வழங்குவதுடன் தங்கள் சேமிப்பையும் அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சியையும் செய்து வருகின்றன்.
இலங்கையை பொறுத்த மட்டில் சர்வதேச முதியோர் சிறுவர் தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்ற போதிலும், இது சமுர்த்தி திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. சமுர்த்தி திட்டத்தினை பொறுத்த வரை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் சர்வதேச தினங்களை சிறப்பிக்கும் முகமாக பல வேலைத்திட்டங்களை பல வருடங்களாக முன்னெடுத்து வருகின்றதை எம்மால் அவதானிக்க முடிக்கின்றது. இதன் அடிப்படையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அறிவுருத்தலுக்கு அமைய நாடு ரீதியாக சர்வதேச முதியோர் சிறுவர் தினங்கள் கொண்டாடப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டு வருவதுடன் சமுர்த்தி வங்கிகளில் சிறுவர்களிடையே சேமிப்பை ஊக்குவிக்க விசேட பரிசில்கள் வழங்கும் வேலைத்திட்டங்களும் நடைபெற்று வருகின்றன்.
கடந்த காலங்களில் சிறுவர் கௌரவிப்பு முதியோர்கள் வாழும் போது கௌரவிக்கப்பட்ட நிகழ்வுகளும் சமுர்த்தி பிரிவால் நடைபெற்றுள்ளன. எனவே 01.10.2022 ஆகிய இன்றும் பல நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளன.
"இன்றைய சிறுவர்கள் நளைய தலைவர்கள்"
"முதியோர்களை மதிப்போம் உரிய கௌரவம் வழங்குவோம்......."
Comments
Post a Comment