நல்ல சேவைக்கு என்றுமே மதிப்பு கிடைக்கும்......
சமுர்த்தி உத்தியோகத்தராக கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிறைத்துறைச்சேனை 206/A கிரம சேவகர் பிரிவில் 05 வருடங்களாக சேவையாற்றி மாற்றலாகி செல்லும் M.M.சக்கூர் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வை சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து தங்கள் நல்ல சேவையாளருக்கு மதிப்பளித்து வழியனுப்பி வைத்துள்ளது.
ஸம் ஸம் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் ஜனாப் M.I.M.தாஹா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.A.M.பஸீர் அவர்களும், சிறப்பு விருந்தினராக சமுர்த்தி வங்கி முகாமையாளர் S.ரவிச்சந்திரன் அவர்களும், கிராம சேவகர் S.சஜ்மி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது தங்களுக்கான அர்பணிப்ப சேவை செய்த M.M.சக்கூர் அவர்களை வாழ்த்தி வாழ்த்துபா வாசிக்கப்பட்டதுடன், பொன்னாடை அணிவித்து பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதே வேளை தங்கள் கிராமத்தை புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட A.C.சாதிக்கீன் அவர்களையும் வரவேற்று பூச்சென்டும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது சமுர்த்தி சிறுவர் அமைப்புக்களின் நடன நிகழ்வும் இடம் பெற்றது.
Comments
Post a Comment