மாதிரி கிராம தகவல் திரட்டலும் தெளிவூட்டும் கருத்தரங்கும்;.....

 மாதிரி கிராம தகவல் திரட்டலும் தெளிவூட்டும் கருத்தரங்கும்.....



சமுர்த்தி திட்டத்தில் தற்போது மிக முக்கிய பங்கை வகித்து வருகின்றது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பாகும். இவ்வமைப்பின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

 இதன் அடிப்படையில் கோரளைப்பற்று மத்தி பிரிவில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாதிரி கிராமத்தின் தகவல்களை எவ்வாறு இலகுவாக திரட்டுவது, மற்றும் எவ்வாறு சேமித்து வைப்பது தொடப்பாக தெளிவூட்டும் கருத்தரங்கு ஒன்று சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்களுக்கு அன்மையில் நடாத்தப்பட்டது.

கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி முகாமையாளர் S.A.M.பஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிகழ்வில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L.ஜயூப்கான் அவர்களும், கிராம உத்தியோகத்தர் A.L.ஜௌபர் அவர்களும், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் A.C.சாதிக்கீன் அகியோரும் கலந்த கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  







Comments