2022 சௌபாக்கியா வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு.....

 2022 சௌபாக்கியா வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு.....



2022ம் ஆண்டிற்கான சௌபாக்கியா 6,50,000 ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் தற்பொது நாடுபூராவும் செயற்படுத்தி வருகின்றன. சமுர்த்தி திட்டத்தில் மிக முக்கியமான ஒரு செயற்பாடாக வறிய மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சௌபாக்கியா 6,50000 ரூபாய் வீட்டுத்திட்டம், சௌபாக்கியா 2,25000 ரூபாய் வீட்டுத்திட்டம், திரிபியச வீட்டுத்திட்டம், லொத்தர் சீட்டிலுப்பு வீட்டுத்திட்டம் மற்றும் வீடுகள் திருத்துவதற்காக 1,25000 ரூபாய் வீட்டுத்திட்டங்கள் என சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் ஆண்டு தோறும் பல்வேறு வீட்டுத்திட்டங்கள் மூலம் சமுர்த்தி நிவரானம் பெறும் பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. 

 இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லடி சமுத்தி வலயத்தின் கல்லடி உப்போடை கிராமசேவர் பிரிவைச்சேர்ந்த சுப்பிரமணியம் கோமளரெத்தினம் எனும் சமுர்த்தி பயனாளிக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சௌபாக்கிய விசேட வேலைத்திட்டத்தின் ஊடாக 6,50000 ரூபாய் பெறுமதியான வீட்டை அமைத்துக்கொள்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமைய முகாமையாளர் திரு.பரமலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், கல்லடி சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


தற்போது வசிக்கும் வீடு









Comments