மக்கள் பணி செய்த விஜியேந்திரன் நம்மை விட்டு பிரிந்தார்.......
1997.01.08 முதல் சமுர்த்தி நியமனம் பெற்று கறுவாஞ்சிக்குடி பிரதேச செயலக மக்களுக்காக சேவையாற்றி வந்த நாகராசா விஜியேந்திரன் 07.05.2022 அன்று விபத்தில் சிக்கி ஆகால மரணமானார்.
களுவாஞ்சிக்குடியை பிறப்பிடமாக கொண்டு 1964.12.04 பிறந்த இவர் புஸ்பாதேவியை மணம்முடித்து இரு பிள்ளைகளின் தந்தையாவார், தற்போது 58 வயதை கடந்த இவர் மட்/பட்டிருப்பு மகா வித்தியாலத்தில் கல்வி கற்றது குறிப்பிடத்தக்கது. சமுர்த்தி இணைந்து மக்கள் சேவையாற்றி இவர் கடைசியாக எருவில் சமுர்த்தி வங்கியின் காசாளராக கடமையாற்றி இருந்தார்.
அன்னாரின் நல்லடக்கம் 08.05.2022 அன்று பிற்பகல் 4.00மணிக்கு நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
Comments
Post a Comment