சமுர்த்தி உத்தியோகத்தர் விஜியேந்திரன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பணிப்பாளர் நாயகம்.....
07.05.2022 அன்று அகால மரணடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட எருவில் சமுர்த்தி வங்கியில் காசாளராக கடமையாற்றி நடராஜா விஜியேந்திரன் அவர்களின் இழப்பு சமுர்த்தி திணைக்களத்திற்கே ஒரு பாரிய இழப்பாகும், என இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலக சிறி அவர்கள் தன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் பல்வேறு பதவிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றி கடைசியாக சமுர்த்தி வங்கியில் தன் அர்ப்பணிப்பான சேவையை வழங்கி, குறிப்பாக சமுர்த்தி வங்கி கணணிமயமாக்கல் பணியிலும் இரவு பகல் பாராது உழைத்த இந்த பெறுமதி வாய்ந்த சமுர்த்தி உத்தியோகத்தரான அமரர் நடராஜா விஜியேந்தின் அவர்களை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் என்றுமே மறவாது. எனவே அன்னாரை இழந்து தவிக்கும் அவரது மனைவி, பிள்ளைகளுக்கு தன் ஆழ்ந்த அனுதாபத்தினையும், இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலக சிறி அவர்கள் தன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment