சிறந்த சேவையாளன் விஜியேந்திரன் அவர்களை இழந்து நிற்கின்றோம் - புவனேந்திரன்

 சிறந்த சேவையாளன் விஜியேந்திரன்  அவர்களை இழந்து நிற்கின்றோம் - புவனேந்திரன்



சிறந்த மக்கள் சேவையாளான நடராஜா விஜியேந்திரன் அவர்களை இன்று மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களம் இழந்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் தன் இரங்கள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

07.05.2022 அன்று ஓந்தாச்சிமடத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரான நடராஜா விஜியேந்திரன்   அவர்கள் அகால மரணமடைந்த செய்தியை கேட்டவுடன் மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், அவரின் ஒப்பற்ற சேவை இறுதியாக எருவில் சமுர்த்தி வங்கியில் காசாளராக பணியாற்றி விட்டு விடைபெற்றுச் சென்றுள்ளதை எண்ணும் போது அவரின் மகத்தான சேவை சமுர்த்தி திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதை எண்ணி பார்க்கின்றேன். அன்னாரின் இழப்பு அவரின் குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாதது, அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் தன் இரங்கள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 அத்துடன் அன்னாரின் குடும்பத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.


Comments