சமுர்த்தி வங்கிகளை பார்வையிட்ட சமுர்த்தி பணிப்பாளர்.......
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் அன்மையில் சமுர்த்தி வங்கிகளை பார்வையிட்டு அவற்றின் செயற்பாடுகள் பற்றி அவ்வங்கி முகாமையாளர்களிடம் கேட்டறிந்து கொண்டார். இதன் அடிப்படையில் கல்லடி சமுர்த்தி வங்கி, ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி, மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி, மாங்கேணி சமுர்த்தி வங்கி, சந்திவெளி சமுர்த்தி வங்கி, கதிரவெளி சமுர்த்தி வங்கி போன்ற சமுர்த்தி வங்கிகளை பார்வையிட்டார்.
இதன் போது சமுர்த்தி பயனுகரிகளுக்கான நிவாரண கொடுப்பனவு வழங்குவதை மிக வேகமாக துரிதப்படுத்துமாறும், பொது மக்களுக்கான சேவையை அர்பணிப்புடன் செயற்படுத்துமாறும் கேட்டுக் கொண்டதுடன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தாம்மால் முடிந்த வரை மிக விரைவாக நிவர்த்தி செய்து தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை 14 பிரதேச செயலகங்களிலும் தற்போது 31 சமுர்த்தி வங்கிகள் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment