சுபீட்சத்தின் வருடமாக சுபகிருது வருடம் அமையட்டும்.......
பிறந்துள்ள சுபகிருது வருடம் எல்லோருக்கும் ஒரு சுபீட்சத்தின் வருடமாக அமையட்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தன் தழிழ் சிங்கள புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இன்றைய கால கட்டத்தில் பெரும் கஸ்டத்தின் மத்தியில் வாழும் நாம் பல இன்னல்களை சந்தித்து வாழ்ந்து வருகின்றோம். இருந்த போதிலும் இவ் துன்பங்கள் அனைத்தும் நீங்கி பிறந்துள்ள சுபகிருது புது வருடம் அனைவர் வாழ்விலும் ஒரு சுபீட்சமான வருடமாக பிறக்க தாம் என்றும் இறைவனை பிரார்த்திப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் தம் புது வருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் சமுர்த்தி சார் உத்தியோகத்தர் அனைவருக்கும் தம் தழிழ் சிங்கள் புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment