மட்டு மாவட்ட சமுர்த்தி செயலக மீளாய்வு கூட்டம்....

 மட்டு மாவட்ட சமுர்த்தி செயலக மீளாய்வு கூட்டம்....



மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி மீளாய்வு கூட்டம் மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 18.04.2022 அன்று நடைபெற்றது. 

மாவட்ட செயலக  சமுர்த்தி பிரிவில் நடைபெற்ற வேலைத்திட்டங்களின்  முன்னேற்றம் பற்றிய கலந்துரையாடல்  மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும்  பிரிவுக்கான சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் கேட்டறித்து கொண்டதுடன், பணிகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். மற்றும் பணிகளை இலகுவாக்கும் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடினார்.

 இக் கூட்டத்தில் மாவட்ட சமுர்த்தி பிரிவிற்கான கணக்காளர் M.S.பஸீர் அவர்களும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி கணக்காய்வு உத்தியோகத்தர்கள், சமுர்த்தி புலனாய்வு உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.







Comments