சமுர்த்தி சமூகப் பாதுகாப்பு கொடுப்பணவு இலகுபடுத்தல் வேலைத்திட்டம்.....
சமுர்த்தி திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் சமுர்த்தி சமூக பாதுகாப்பு கொடுப்பணவு திட்டம் (காப்புறுதி) மிக விரைவாக செயற்படுத்துவதற்காக சமுத்தி அபிவிருத்தி திணைக்களம் கணணி மயமாக்களின் கீழ் துரித வேலைத்திட்டத்தை ஒரு பிரதேச செயலகத்தில் ஒரு சமுர்த்தி வங்கியூடாக முதல் கட்ட பணிகளை பரீட்சாத்தமாக ஆரம்பித்து நடைமுறைபடுத்தி வருகின்றது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு சமுர்த்தி வங்கியில் முதல் கட்டமாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டு முதல் கொடுப்பணவு வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளிடம் கொடுப்பணவை வழங்கி வைத்தார். இதன் போது மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி முகாமையாளர் S.செந்தூர்வாசன் அவர்களும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment