மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை குழு கூட்டம் டேபா மண்டபத்தில்.....

 மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை குழு கூட்டம் டேபா மண்டபத்தில்.....

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் முதலாம் காலாண்டுக்கான கூட்டம் மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் அன்மையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் 14 பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள், சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

 இதன் போது சமுதாய அடிப்படை அமைப்பு தொடர்பான செயற்திட்டங்கள் பற்றி செயலமர்வும் இடம் பெற்றது. இச்செயலம்வை மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பிற்கு பொறுப்பான முகாமையாளர் K.பகீரதன் அவர்களால் வழங்கப்பட்டதுடன், தேசிய சமுர்த்தி சம்மேளனத்திற்கு இரண்டு பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டனர். பட்டிப்பளை பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பை சேர்ந்த தலைவி கோமலாதேவி திருச்செல்வம் அவர்களும், ஏறாவூர் நகர் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பை சேர்ந்த தலைவி முகமட் சரீனா அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ் சமுர்த்தி முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.






Comments