இதை தான் அன்றும், இன்றும், என்றும் ஆசைப்படுகின்றது KSV&KSC....
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்குடன் பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 வயதிற்குட்பட்டோருக்கான ஒரு நாள் ஆரம்ப பயிற்சிகள் 05.03.2022 அன்று வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சபையினால் நடாத்தப்பட்ட இப்பயிற்சிகளில் மாகான பயிற்றுவிப்பாளரான நிலந்த விமலவீர அவர்களும் மாவட்ட பயிற்றுவிப்பாளரான அன்வர் டீன் அவர்களின் தலைமையில் பயிற்சிகள் நடாத்தப்பட்டன. இதன் போது பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களும் இணைந்த செயற்பட்டகு குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் போது கருத்து தெரிவித்த பயிற்றுவிப்பாளர்கள் மட்டக்களப்பில் இருந்து ஒரு வீரரை தேசிய அணிக்கு கொண்டு செல்வதற்கான முன் ஆயத்த பணிகளை தாம் 05.03.2022 மட்டக்களப்பில் ஆரம்பித்துள்ளதாகவும் தற்போது 13 மற்றும் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இனிவரும் இரண்டு மூன்று வருடங்களில் ஒரு வீரரையாவது தேசிய 19 வயதிற்குட்டோருக்கான அணியில் உட்புகுத்த முடியும் என தெரிவித்தார்.
இந்த விடயத்தை தான் கோட்டைமுனை விளையாட்டு கழகமும், கோட்டைமுனை விளையாட்டு கிராமமும் கடந்த காலங்களில் இருந்து இன்று வரை சுட்டிக்காட்டி வருகின்றது. இதற்காக தான் மட்டக்களப்பில் EPP அமைப்பு உருவாக்கப்பட்டு 2018ம் ஆண்டு தொடக்கம் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களை பாடசாலை மட்டத்தில் இனம் கண்டு கொண்டது. இந்த விடயத்தை தான் கோட்டைமுனை விளையாட்டு கழகமும், கோட்டைமுனை விளையாட்டு கிராமமும் அன்று மட்டமல்ல இன்றும் என்றும் தொடர வேண்டும் என ஆசைப்படுகின்றது.
இது நல்லதொரு ஆரம்பம் தவறாமல் இதை நேர்த்தியாக கொண்டு சென்றால் வெற்றியடையலாம். இச் செயற்பாட்டை தொடங்கிய அனைவருக்கும் கோட்டைமுனை விளையாட்டு கழகம், கோட்டைமுனை விளையாட்டு கிராமம் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment