சமுர்த்தி தகவல் தொழில் நுட்ப (IT) உத்தியோகத்தர்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு....

 சமுர்த்தி தகவல் தொழில் நுட்ப (IT) உத்தியோகத்தர்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு....



தற்போது சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் சமுர்த்தி உத்தியோகத்தர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தகவல் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களுக்கு ஆறு மாத கால பயிற்சி வழங்கப்பட்டு இவ்வங்கிகளை பார்வையிடும் கடமையும் வழங்கி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இவர்களுக்கான தகவல் தொழில் நுட்ப (IT) உபகரணங்கள் வழங்கி வைக்குமாறு சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் அவர்களின் பணிப்புரைக்கு அமைய 24.03.2022 ஆகிய இன்று வழங்கப்பட்டுள்ளது. 

  இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்ட்டிருந்தனர். இதன் போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான T.சுரேஸ் அவர்களுக்கான தகவல் தொழில் நுட்ப (IT) உபகரணங்கள் மண்முனை வடக்கு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கத்தின் மூலம் கொள்வணவு செய்து 24.03.2022 ஆகிய இன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் அவர்களும் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் K.பரமலிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர்.







Comments