CBO அமைப்புக்களுக்கான ஒரு நாள் செயலமர்வு......

CBO அமைப்புக்களுக்கான ஒரு நாள் செயலமர்வு......



சமுர்த்தி திணைக்களத்தின் தற்போதைய செயற்பாட்டில் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைப்பாக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் செயற்படுகின்றன. இச் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் நிர்வாக செயற்பாடு, கணக்கீட்டு செயற்பாடு தொடர்பான ஒரு நாள் செயலமர்வை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 28.03.2022ஆம் திகதி அன்று மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது உரையாற்றிய மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள்  உரையாற்றுகையில் தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவம் பற்றி குறிப்பிட்டு தலைமைத்துவம் என்பது பலவிடயங்களை தொட்டாலும் ஆன்மீக தலைமைத்துவம், விளையாட்டுத்துவ தலைமைத்துவம், கலாசார தலைமைத்துவம், பாடசாலை தலைமைத்துவம் என பல தரங்களில் தலைமைத்துவம் விளங்குவதாகவும் குறிப்பிட்டார். முகாமைத்துவம் நிர்வாகத்தை நடாத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டாலும் அதன் செயற்பாடு பலரிடையே பல மாற்றத்துடன் செயற்படுவதை எம்மால் அவதானிக்க படுவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றுகையில் அரச சேவையாளர்களான நாம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு உத்தியோகத்தராக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்கள் 2022ஆம் ஆண்டு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் சிறப்பாக செயற்பட வேண்டும் எனவும் தற்போது சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அலுவலகம் திறக்கப்பட்டு சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு, இதற்கான மிக முக்கியமான செயற்பாடு தான் கடன்களுக்கான கணக்குகள் பதிவு பற்றியது தான், எனவே இன்று நடைபெறும் செயலமர்வில் சமுதாய அடிப்படை அமைப்புக்களின் கணக்கு தொடர்பாக நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.

இதன் விரிவுரையாளராக மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கான முகாமையாளா K.பகீரதன் அவர்களும், களுவாஞ்சிக்குடி முகாமைத்துவ பணிப்பாளர் K.உதயகுமார் அவர்களும், கோரளைப்பற்று மத்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு.பஸீர் அவர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.காமராஜ் அவர்களும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

 இச்செயலமர்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர்கள், சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










Comments