சௌபாக்கியா வாரம் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் .......

 சௌபாக்கியா வாரம் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் .......

நாடுபூராவும் 24.03.2022 தொடக்கம் 31.03.2022 வரை சமுர்த்தி சௌபாக்கிய வாரம் நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேச செயலக மட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

 இதன் அடிப்படையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திலும் சௌபாக்கியா வேலைத்திட்டத்தில் சமுர்த்தி பயனுகரிக்கான வீடு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. 

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட களுவன்கேணி கிராமத்தில் சமுர்த்தி பயனுகரியான மாணிக்கம் நவரெட்னம் என்பவருக்கு சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடு கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளியிடம் வீட்டை கையளித்தார். 

 மேற்படி இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமைய முகாமையாளர் அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் அவர்களும், கிராம சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.









Comments