ஏறாவூர் பற்று பிரதேச செயலக பசுமையான தேசம் வேலைத்திட்டம் மங்களகம கிராமத்தில்.......

 ஏறாவூர் பற்று பிரதேச செயலக பசுமையான தேசம் வேலைத்திட்டம் மங்களகம கிராமத்தில்.......




நாடுபூராவும் நடைபெற்று வரும் பசுமையான தேசம் தேசிய வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை புரட்சி வேலைத்திட்டம் ஏறாவூர் பிரதேச செயலகத்தின் மங்கள கம கிராமத்தில் பிரதேச செயலாளர் K.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் கலந்து பயனாளிகளுக்கு நாற்று கண்றுகளை வழங்கி வைத்ததுடன் சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு சௌபாக்கியா வீட்டுத்திட்டத்தின் கீழ் ஒரு சமுர்த்தி பயனுகரிக்கான வீட்டிற்கான ஆரம்ப பணிகளையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமைய முகாமையாளர் அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் அவர்களும், கிராம சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும் கிராம சேவை உத்தியோகத்தர்கள்,  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திட்டமிடல், விவசாய போதனாசிரியர்கள்,  சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், சமுர்த்தி பயனுகரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.











Comments